யுவராஜ் சிங் சாதனைக்கு இன்று 10 வருடம்!

யுவராஜ் சிங் சாதனைக்கு இன்று 10 வருடம்!

யுவராஜ் சிங் சாதனைக்கு இன்று 10 வருடம்!
Published on

ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி யுவராஜ் சிங் சாதனை செய்து இன்றோடு பத்து வருடமாகிவிட்டது. 

கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தது இந்தியா. மிடில் ஆர்டரில் களமிறங்கினார் யுவராஜ் சிங். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஃபிளிண்டாப் பந்துவீச்சில், யுவராஜ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார் அடுத்தடுத்து. கோபமான அவர், யுவராஜை ஏதோ திட்ட, கடுப்பாகிவிட்டார் யுவி. அடுத்த ஓவரை ஸ்டூவர்ட் பிராட் வீசினார். ஃபிளிண்டாப் மீதான கோபத்தை, பிராட் பந்திடம் காண்பிக்க ஆரம்பித்தார் யுவி. பந்தை பறக்கவிட்டுவிட்டு ஃபிளிண்டாப் முகத்தைப் பார்த்தார் யுவி. ’ஏன்டா திட்டினோம்’ என்று நினைத்தபடி தலையை தலைகவிழ்ந்தார் அவர். 

ஒவ்வொரு பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட, சிலிர்த்தனர் ரசிகர்கள். ஆறு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்திய யுவிக்கு ஏராளமான பாராட்டுகள். ஆனால் நொந்து போனார் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். யுவராஜ், ஃபிளிண்டாப், பிராட் ஆகியோருக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது அது. இந்த போட்டி நடந்து இன்றோடு சரியாக பத்து வருடம் ஆகிவிட்டது. 

அப்படியெல்லாம் ஆடிய பஞ்சாப் சிங்கம், இப்போது அணியில் இடம் கிடைக்க அல்லாடி வருவது சோகம்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com