டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை

டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை

டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் யுவராஜ் சிங் யோசனை
Published on

இந்திய கிரிக்கெட்டின் டி20 அணிக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன் பதவியிலிருந்து விலகியது முதல் அனைத்து பிரிவிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக உள்ளார். அவர் அனைத்து பிரிவுகளிலும் விளையாடி வருவதால் அவருக்கு அதிக நெருக்கடி வர ஆரம்பித்து விட்டது. ஆகவே இந்திய டி20 அணிக்கு வேறு ஒரு கேப்டனை நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், “முன்பு எல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய இரண்டு பிரிவுகளே இருந்தது. இதனால் கேப்டன்களுக்கு அதிக நெருக்கடி இருக்காது. ஆனால் எப்போது டி20 கிரிக்கெட் அறிமுகமானதோ அப்போது முதல் கேப்டன்களுக்கு நெருக்கடி அதிகமாகி உள்ளது. விராட் கோலி மீது தற்போது அந்தவகை நெருக்கடியே அதிகமாக தொடங்கியுள்ளது. 

ஆகவே குறைந்த ஓவர் போட்டிகளுக்கு வேறு கேப்டனை இந்தியா நியமிக்கவேண்டும். என்னைப் பொருத்தவரை அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிக்கப்படலாம். ஏனென்றால் அவர் கேப்டன் வாய்ப்பு கிடைத்தப் போது சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனினும் விராட் கோலியால் எவ்வளவு நெருக்கடியை தாங்க முடியும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்யவேண்டும். 

அதேபோல டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் ஷர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். அவரை ஒரு போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கிவிட்டு அதற்குபிறகு அவரை அணியிலிருந்து நீக்ககூடாது. ஏனென்றால் ஒருவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினால் அவருக்கு 10 முதல் 12 இன்னிங்ஸில் விளையாட வாய்ப்பு கொடுக்கவேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பாக விளையாட முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com