யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவுக்கு கதவுகள் மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவுக்கு கதவுகள் மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவுக்கு கதவுகள் மூடப்படவில்லை: ரவி சாஸ்திரி
Published on

யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா  இருவருக்குமான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், ‘நான் அணித்தேர்வில் தலையிடுவதில்லை. தற்போதைய பார்ஃம், உடற்பயிற்சி தகுதி, பீல்டிங் அகியவற்றிற்கான அளவீட்டில் சிறப்பாக செயல்பட்டால் ஒவ்வொரு வீரர்களும் இந்திய அணிக்கான தேர்விற்கு தகுதியானவர்கள். அந்த வகையில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கான கதவு மூடப்படவில்லை. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை மனதில் வைத்து இலங்கைக்கு எதிரான தொடரில் ஒவ்வொரு வீரருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். உலகக்கோப்பைக்கான சிறந்த வீரர்களை அடையாளம் காண ஆஸ்திரேலியா தொடர் மிகச்சிறந்த தொடராக அமையும்’ தெரிவித்துள்ளார். 

யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் எனக்கூறப்படும் நிலையில் ரவிசாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com