‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்  

‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்  
‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்  

ஸ்டீவ் ஸ்மித் மீது பவுண்சர் பந்து பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் போட்ட ட்வீட்டிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கிண்டலாக பதிலளித்துள்ளார். 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீது பவுண்சர் பந்து பட்டது. இதனைத் தொடர்ந்து நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித், மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் வந்து மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த ஸ்மித் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும்  வலி தொடர்ந்து இருந்ததால் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட வேண்டாம்  எனடாக்டர்கள் அறிவுறுத்தியதையடுத்து இவருக்குப் பதில் மற்றொரு வீரர் அணியில் சேர்க்கப்பட்டார். 

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “கிரிக்கெட் விளையாட்டில் பவுண்சர் பந்துகள் வீசுவது சகஜம்தான். எனினும் பவுண்சர் பந்து பேட்ஸ் மேன்னை தாக்கிவிட்டால் பந்துவீச்சாளர் அவரை நலம் விசாரிக்கவேண்டும். ஸ்டீவ் ஸ்மித் விவகாரத்தில் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் செய்தது மிகவும் தவறு. ஸ்மித் வலியில் துடித்து கொண்டிருக்கும் போது அவரை ஆர்ச்சர் சென்று பார்த்திருக்க வேண்டும். நான் வீசிய பந்தில் யாராவது அடிபட்டால், நான் முதலில் சென்று பேட்ஸ்மேனிடம் நலம் விசாரிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில், “ஆமாம் நீங்கள் முதலில் ஓடி வந்து நலம் விசாரிப்பீர்கள். நன்றாக இருக்கிறீர்களா என்று கேட்பீர்கள். ஏனென்றால் இன்னும் நிறைய பவுண்சர்கள் வீச திட்டமிட்டிருப்பீர்கள். ஆகவேதான் நலம் விசாரிப்பீர்கள்” எனக் கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com