யுவி, ஹர்பஜன் ஓகே... ஆனால் காம்பீர்? அதிருப்தியில் அப்ரிதி!

யுவி, ஹர்பஜன் ஓகே... ஆனால் காம்பீர்? அதிருப்தியில் அப்ரிதி!
யுவி, ஹர்பஜன் ஓகே... ஆனால் காம்பீர்? அதிருப்தியில் அப்ரிதி!

இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்ந்து நட்புடன் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமான வார்த்தைகள் உதிர்வது சகஜம்தான். மாறி மாறி திட்டிக்கொள்வது உண்டு. ஆனால் அது மைதானத்தில் மட்டுமே. விளையாட்டில் இதுவும் ஒரு விளையாட்டு. மைதானத்தை விட்டுவிட்டு வெளியே வந்தால் சராசரி வாழ்க்கைக்கு மனம் திரும்பிவிடும். எல்லா கிரிக்கெட் வீரர்களுமே அப்படித்தான். ஆனால், கவுதம் காம்பீர் மட்டும் அதில் இருந்து வெளிவராமல் இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருக்கிறார் அப்ரிதி.

2007-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் கான்பூரில் மோதிய போட்டி ஒன்றில் காம்பீரும் அப்ரிதியும் மோதிக்கொண்டனர். காரசாரமாகத் திட்டிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தை மனதில் வைத்தே அப்ரிதி இப்படிக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘ இந்திய கிரிக்கெட் அணியில் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ஜாகிர் கான் போன்றோர் என்னுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். எனக்கு நல்ல நண்பர்கள். நான் மதிக்கும் மற்றொரு கிரிக்கெட் வீரர் விராத் கோலி. அவர் கொடுத்த, இந்திய வீரர்கள் கையெழுதிட்ட ஜெர்சி என்னிடம் பத்திரமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார் அப்ரிதி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com