ஊக்க மருந்து உட்கொண்ட யூசப் பதான் 5 மாதம் சஸ்பெண்ட்

ஊக்க மருந்து உட்கொண்ட யூசப் பதான் 5 மாதம் சஸ்பெண்ட்
ஊக்க மருந்து உட்கொண்ட யூசப் பதான் 5 மாதம் சஸ்பெண்ட்

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டிபிடிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதானை பிசிசிஐ 5 மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளது.  

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற உள்ளூர் டி20 போட்டியின் போது யூசப் பதான் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அவர் ஊக்க மருந்து சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார். சோதனையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை யூசப் உட்கொண்டது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, யூசப் பதானை 5 மாதங்கள் விளையாட இடைக்கால தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறவுள்ளதால் அதில் யூசப் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், ரஞ்சி டிராபியில் யூசப் விளையாடிய பரோடா அணிக்கும் அவரை எடுக்க வேண்டாம் என்று பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது. 

2007-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் யூசப் பதான் அறிமுகமானார். அதேபோல் 2008-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 சதங்கள் உட்பட 810 ரன்கள் எடுத்துள்ளார். 22 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 236 ரன்களையும், 13 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 2011-ல் டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் யூசப் பதான் இடம்பெற்றிருந்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். 149 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள யூசப் 2904 ரன்களும், 42 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com