'தினேஷ் கார்த்திக்கிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமில்லை' - ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

'தினேஷ் கார்த்திக்கிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமில்லை' - ஹர்பஜன் சிங் ஓபன் டாக்
'தினேஷ் கார்த்திக்கிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமில்லை' - ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து தோனி, யுவராஜ் சிங் ஆகியோரின் ஃபினிஷ்களை எதிர்பார்ப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அசத்தலாக முன்னேறியது. இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அடிலெய்டு ஓவலில் நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் விக்கெட் கீப்பராக யார் களமிறங்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தொடரின் முதல் 4 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக்கில் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்ட் இறங்கினார். இதனால் அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு என்பது சஸ்பென்ஸாக உள்ளது. தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக இந்திய அணியில் தனது இடத்தை பிடித்துவிட்டார். அதுமட்டுமல்லாது தினேஷ் கார்த்திக்கே 7வது பேட்ஸ்மேனாக இறங்குகிறார். இந்நிலையில், அரையிறுதியில் ரிஷப் பண்ட்-யை விட தினேஷ் கார்த்திக் தொடர்வதே சிறந்தது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசிய ஹர்பஜன் சிங்,  ''நான் ராகுல் டிராவிட்டுடன் ஒத்துப்போகிறேன். ஏனென்றால் அவருக்கு ரிஷப் பண்ட் பிடிக்கும். ஆனால் நான் தினேஷ் கார்த்திக்கையே விரும்புகிறேன். 7வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அந்த இடத்தில் எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் செய்ததை பலரால் செய்ய முடியவில்லை. நீங்கள் தினேஷ் கார்த்திக்கை அவர்களுடன் ஒப்பீட்டு பேசுவது சரியல்ல. இதுவரை சிறப்பாகச் செயல்பட்டுள்ள தினேஷ் கார்த்திக்கிடம் இருந்து  தோனி அல்லது யுவராஜ் சிங் ஆகியோரின் ஃபினிஷ்களை எதிர்பார்ப்பது நியாயம் அல்ல. தினேஷ் கார்த்திக் ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் இந்த நிலைக்கு வருவதற்கு கடினமாக உழைத்தார்.  அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.  அணியில் மற்றொரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க அணி விரும்புகிறது.

ரோகித் சர்மா முக்கியமான வீரர்.  அவர் ரன் குவிக்க வேண்டும் என்று நாம் அனைவருமே விரும்புகிறோம். இன்றைய ஆட்டம் அவரது நாளாகக் கூட  இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தியா வெற்றி பெறுவது உறுதி'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே: இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதப்போவது யார்..? இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com