"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!

"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!
"வாய்ப்புகள் கிடைக்கும் கவலை வேண்டாம்" - ஓய்வறையில் உத்வேகமாக பேசிய ரஹானே!

ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் கவலை வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றிப்பெற்றது. மேலும் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் வென்று வரலாற்று சாதனைப்படைத்தது. இந்நிலையில் வெற்றிக்கு பின்பு காபாவின் வீரர்கள் ஓய்வறையில் வீரர்களிடம் ரஹானே உரையாற்றிய வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

அதில் பேசிய ரஹானே "இது நமது அனைவருக்கு ஓர் அற்புதமான தருணம். அடிலெய்டின் தோல்விக்கு பின்பு மெல்போர்னில் நாம் பெற்ற வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. இந்த வெற்றியில் அனைவரின் பங்களிப்பும் இருக்கிறது. ஒருவர், இருவரால் இந்த வெற்றி சாத்தியப்படவில்லை. மிக முக்கியமாக குல்தீப் யாதவ், கார்த்திக் தியாகி ஆகியோரை குறிப்பிட விரும்புகிறேன். குல்தீப் வருத்தமாக உணர்வதை நான் அறிவேன். ஆஸ்திரேலியாவில் ஒரு போட்டியில் கூட நீங்கள் விளையாடவில்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஆனால் குல்தீப் உங்கள் செயலும் மன உறுதியும் அபாரமாக இருந்தது. உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து பயிற்சியும் முயற்சியும் செய்யுங்கள். கார்த்திக் தியாகி நீங்கள் சிறந்த வீரர். கவலை வேண்டாம்" என ரஹானே பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com