பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து யூனிஸ் கான் விலகல்

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து யூனிஸ் கான் விலகல்
பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் பதவியிலிருந்து யூனிஸ் கான் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து யூனிஸ் கான் விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் 43 வயதான யூனிஸ்கான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அவரது ஒப்பந்தம் இருந்தது.

இந்த நிலையில் அவர் திடீரென பேட்டிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒதுங்கிய அவர் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. வருங்கால போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் விதம் பிடிக்காததால் அவர் பதவியை துறந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இம்மாதம் 25 ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படும் பாகிஸ்தான் அணி அங்கு 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீசுக்கு பயணித்து ஐந்து டி20 போட்டி மற்றும் 2 டெஸ்ட்களில் பங்கேற்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com