இந்திய C அணியை வீழ்த்திய ஸ்பெயினுடன் மோதும் இளம் வீரர்கள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்திய C அணியை வீழ்த்திய ஸ்பெயினுடன் மோதும் இளம் வீரர்கள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்திய C அணியை வீழ்த்திய ஸ்பெயினுடன் மோதும் இளம் வீரர்கள் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய ஓபன் A அணி ரோமானிய அணியையும், மகளிர் A அணி பிரான்ஸ் அணியையும் எதிர்கொள்ள உள்ளனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4வது சுற்றில் இந்திய சார்பில் ஓபன் பிரிவில் பங்கேற்றுள்ள B அணியும் மகளிர் பிரிவில் பங்கேற்றுள்ள A மற்றும் B அணி தங்களுடைய வெற்றி பாதையை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 5வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய A அணி ரோமானிய அணியையும், இந்திய B அணி ஸ்பெயின் அணியையும், இந்திய C அணி சில்லி அணியையும் எதிர்கொள்கின்றனர்.

மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்திய A அணி பிரான்ஸ் அணியையும், இந்திய B அணி ஜார்ஜியா அணியையும், இந்திய C அணி பிரேசில் அணியையும் எதிர்கொள்கின்றனர்.

நேற்று நடைபெற்ற 4வது சுற்றில் இந்திய C அணியை வீழ்த்திய பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி இன்று இளம் வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ், நிக்கல் சரின் உள்ளிட்டோர் அடங்கியுள்ள இந்திய B அணியை எதிர்கொள்ள உள்ளதால் இந்த போட்டியின் முடிவு என்னவாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com