வலிமையான ஆஸி.,க்கு பதிலடி தருமா இந்திய இளம் படை?

வலிமையான ஆஸி.,க்கு பதிலடி தருமா இந்திய இளம் படை?

வலிமையான ஆஸி.,க்கு பதிலடி தருமா இந்திய இளம் படை?
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

2020-ஆம் ஆண்டில் ஏறத்தாழ சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக களம் இறங்க உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ஷிகார் தவானுடன் இணைந்து மயங்க் அகர்வால் அல்லது ஷுப்மான் கில் களமிறங்க வாய்ப்புள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், லபுஷான், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் என மிரட்டலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கு பதிலடி தர பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே என இந்தியாவும் இளம் பட்டாளத்தை கொண்டுள்ளது. ஒரு நாள் போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகின்றன.

இந்த தொடரில் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கையாக அரங்கில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் பாதியளவு ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். விராட் கோலி தலைமையில் ஆடும் இந்திய அணி 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி அணிந்து ஆடிய நீல நிற ஜெர்சியைப் போன்ற ஆடையையே அணிந்து ஆட உள்ளது. ஒருநாள் தொடரை தொடர்ந்து 20 ஓவர் போட்டிகள் மூன்றும், டெஸ்ட் போட்டிகள் நான்கும் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com