"பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் இருந்தீர்கள்" - லக்னோ வீரர்களை கடுமையாக சாடிய கம்பீர்!

"பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் இருந்தீர்கள்" - லக்னோ வீரர்களை கடுமையாக சாடிய கம்பீர்!
"பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் இருந்தீர்கள்" - லக்னோ வீரர்களை கடுமையாக சாடிய கம்பீர்!

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அந்த அணியின் கவுதம் கம்பீர் லக்னோ வீரர்களை பலவீனமாக விளையாட்டு அறிவு இல்லாமல் விளையாடியதாக கடுமையாக சாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னோ அணி 13.5 ஓவர்களில் 82 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக அடியெடுத்து வைத்தது.

தோல்விக்கு பின் லக்னோ வீரர்களை அந்த அணியின் வழிகாட்டி கவுதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். “போட்டிகளை இழப்பதில் தவறில்லை. அது முற்றிலும் பரவாயில்லை. ஒரு அணி வெற்றி பெற வேண்டும், ஒரு அணி தோற்க வேண்டும். அது தான் விளையாட்டு! ஆனால் விட்டுக் கொடுப்பதில் நிறைய தவறு உள்ளது. இன்று விட்டுக்கொடுத்தோம். பலவீனமாக இருந்தோம். உண்மையாக, ஐபிஎல் அல்லது விளையாட்டில் பலவீனமானவர்களுக்கு இடமில்லை. அங்குதான் பிரச்சனை.

இந்த சீசனில் நாம் அணிகளை வீழ்த்தினோம். இந்த போட்டியில் நல்ல அணிகளுடன் விளையாடியுள்ளோம். ஆனால் இன்று, நான் நினைத்தேன், நாங்கள் முக்கியமான விளையாட்டு உணர்வுடன் விளையாடவில்லை. அவர்கள் நன்றாகப் பந்துவீசுவார்கள் என்று தெரியும். இது சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாம் விளையாடும் உலகத் தரம் வாய்ந்த போட்டி. சவால் விடும் வகையில் நாம் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கம்பீர் கூறினார்.

புள்ளிப்பட்டியலில் லக்னோ 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய அந்த அணிக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை. அடுத்ததாக மே 15 அன்று 4 நாள் இடைவெளிக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது லக்னோ அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com