புதிய பந்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: டேவிட் வார்னர்!

புதிய பந்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: டேவிட் வார்னர்!

புதிய பந்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்: டேவிட் வார்னர்!
Published on

’ஆட்டத்தின் தொடக்கத்தில் புதிய பந்துகளை எதிர்கொள்ளும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கூறினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா- பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்களைக் குவித்தது. டேவிட் வார்னர் 166 ரன்கள் எடுத்தார். 382 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களதேஷ் அணியால், 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில்
அந்த அணி, தோல்வி அடைந்தது. டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் வார்னர் கூறும்போது, ‘’ஆதம் கில்கிறிஸ்டின் சதத்தை (16) சமன் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி, 2 புள்ளிகள் முன்னேறியிருப்பது அதைவிட முக்கியமான விஷயம். ஆட்டத்தின் தொடக்கத்தில் புதிய பந்துகளை எதிர்கொள்ளும்போது அதற்கு மதிப்பளிக்க வேண்டும். மைதானத்தின் சூழலையும் கருத்தில் கொண்டு ஆட வேண்டும். பிட்ச் மெதுவாக இருந்தது. அதனால் முதலில் நிதானமாக ஆடினோம். பந்துவீச்சாளர்களுக்கு கஷ்டம்தான். எளிதாக விக்கெட் எடுக்க முடியாத நிலையில் பிட்ச் இருந்தது’’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்போது, ‘’இந்த பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. அதோடு, அணியில் பார்ட்னர்ஷிப் முக்கி யம். ஒவ்வொரு முறையும் நல்ல பார்ட்னரஷிப் அமைந்து வெற்றிக்கு சென்று விடுகிறோம். இந்த முறையும் அப்படியொரு பார்ட்னர்ஷிப் அமைந்தது சிறப்பாக இருந்தது’’ என்றார்.

பங்களாதேஷ் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா கூறும்போது, ‘’நாங்கள் 40-50 ரன் அதிகமாக விட்டுக் கொடுத்துவிட்டோம். இல்லை என்றால் ஆட்டம் வேறு மாதிரியாக மாறி யிருக்கும். ரஹீம், ஷகிப், தமிம் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். இது, எங்களது சிறந்த ஒரு நாள் அணி’’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com