\
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரம்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரம்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் விவரம்
Published on
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் நேருக்கு நேர் மோதிய போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இதுவரை 14 முறை மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றியின் சதவீதம் 64.28 ஆகவும், நியூசிலாந்து அணியின் வெற்றியின் சதவீதம் 35.71 ஆகவும் உள்ளது.
இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் ஒரு முறை மோதியுள்ளன. அதில் நியூசிலாந்து அணியே வெற்றியை ருசித்துள்ளது. 2016-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் நியுசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com