நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி !
"நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்" கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி !
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறவும், ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கும் சமூக வலைதளங்களை முக்கியமானதாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் சில பிரபலங்கள் பேஸ்புக், டிவிட்டரையும் தாண்டி யூ டியூப் சேனல் மூலமாகவும் தங்களின் கருத்துக்களையும், அன்றாட நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரரும் புதியதாக யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். அதில் கிரிக்கெட் போட்டிகளில் தான் சிறப்பாக ஆடிய தருணங்கள், கார் ஓட்டுவது, கால்பந்து விளையாடுவது என தனது அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இந்த பகிர்வுகளை அவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ஆர்ச்சரின் வீடியோவிற்கு கீழ் ஒரு நபர் ‘ ‘நீங்கள் அழகாக இல்லை” என கமெண்ட் செய்தார். ஆனால் அதற்கு ஆர்ச்சார் ‘ ‘ஆனால் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்” என்று பதிலளித்துள்ளார். இந்த பக்குவமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.