\
இந்திய ஜெர்சியில் மாஸாக போஸ் கொடுத் ‘யார்க்கர்’ நடராஜன்

இந்திய ஜெர்சியில் மாஸாக போஸ் கொடுத் ‘யார்க்கர்’ நடராஜன்

இந்திய ஜெர்சியில் மாஸாக போஸ் கொடுத் ‘யார்க்கர்’ நடராஜன்
Published on

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். இந்நிலையில் அவருக்கு கொடுக்கப்பட்ட இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு மாஸாக போஸ் கொடுத்துள்ளார் நடராஜன். 

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். 16 ஆட்டங்கள் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். துல்லிய யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களையே திணறடித்தார். 

அதன் மூலம் ஆஸ்திரேலிய தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். அவரை முன்னாள் அனுபவ வீரர்கள் வாழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.  

‘4’ம் எண் கொண்ட ஜெர்சியை நடராஜன் அணிந்துள்ளார். 

இந்திய அணி 1992 உலக கோப்பையில் அணிந்திருந்த வின்டேஜ் ஜெர்சியை அணிந்து கொண்டு இந்த தொடரில் இந்தியா விளையாட உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com