ஃபைனல் பீவர்: பங்களாதேஷூக்கு தொடரும் சோகம்

ஃபைனல் பீவர்: பங்களாதேஷூக்கு தொடரும் சோகம்
ஃபைனல் பீவர்: பங்களாதேஷூக்கு தொடரும் சோகம்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு மூன்று முறை வந்தும் அந்த அணி கோப்பையை வெல்ல முடியாத சோகம் தொடர்கிறது.

14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களா தேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில், 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்ற தால் இலங்கை மற்றும் ஹாங்காங் அணிகள் வெளியேறின. தொடர்ந்து நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று மோதின.   துபாயில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, 222 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அபார சதமடித்தார்.

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி போராடி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆசியக் கோப்பையை ஏழாவது முறையாக இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி சோகத்தில் மூழ்கியுள்ளது. ஏனென்றால் அந்த அணி லீக் போட்டிகளில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று மூன்று முறை பைனலுக்கு வந்துள்ளது. மூன்று முறையும் அந்த அணி தோல்வியையே சந்தித்துள்ளதால், அந்த அணியினர் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

பங்களாதேஷ் கேப்டன் மோர்டாசா கூறும்போது, ‘நாங்கள் கடைசி பந்து வந்து வரை விளையாடினோம். இருந்தாலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நாங்கள் செய்த சில தவறுகள் வெற்றி பெற இயலாமல் போய்விட்டது. ஒவ்வொரு முறை 240 ரன்களுக்கு மேல் நாங்கள் குவிக்கும்போது இங்கு வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால்தான் பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை சொன்னேன். இருந்தும் எங்களால் அதிக ரன்கள் குவிக்க முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com