\
transformation of lamin yamal
Yamal as a child with Messi Pt web

உலகையே திகைக்க வைத்த புகைப்படம்... மெஸ்ஸியுடன் குழந்தையாக லமின் யமால் : 19 ஆண்டில் நடந்த மாற்றம் !

19 ஆண்டுகளுக்கு முன்னர் மெஸ்ஸியுடன் குழந்தையாக புகைப்படத்தில் இடம்பெற்றவர் தற்போது அவரை எதிர்த்து ஃபிபா உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் ஆடவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

பொதுவாக கால்பந்து கிளப்புகள் தங்களது ஜெர்சியின் (Jersey) முன் பகுதியில் நிறுவனங்களின் பெயர்களைப் போட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கும். ஆனால், கடந்த 2006-ம் ஆண்டு புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் தனது 107 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாகத் தனது ஜெர்சியின் முன் பகுதியில் இலவசமாக ஐ.நா அமைப்பின் 'UNICEF' என்ற பெயரைப் பொறித்து விளையாடியது.

ஐ.நா அமைப்பின் கீழ் உள்ள உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு செயல்பட்டு வந்தது. பொதுவாக கால்பந்து கிளப்புகள் தங்களது ஜெர்சியின் (Jersey) முன் பகுதியில் நிறுவனங்களின் பெயர்களைப் போட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கும் நிலையில், புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் அணி தங்கள் ஜெர்சியில் UNICEF அமைப்பின் பெயரை விளம்பரப்படுத்தி அந்த அமைப்பை பிரபலப்படுத்த முன்வந்தது.

அதுமட்டுமின்றி பார்சிலோனா கிளப் ஆண்டுதோறும் 1.5 மில்லியன் யூரோக்களை உலகக் குழந்தைகளின் கல்வி மற்றும் எச்.ஐ.வி தடுப்புப் பணிகளுக்காக யுனிசெஃப் அமைப்பிற்கு நன்கொடையாகவும் வழங்கியது. அதோடு பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி UNICEF அமைப்பின் உலகளாவிய நட்புறவுத் தூதராக (Global Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த 2007-ம் ஆண்டு தொண்டு நிறுவனத்தின் புகைப்படத்துக்காக UNICEF அமைப்பு ஒரு அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியை நடத்தியது. அந்த போட்டியில் வெல்லும் தம்பதியின் குழந்தை மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த குழுக்களில் ஒரு தம்பதி வெற்றிபெற்ற நிலையில், அந்த தம்பதியின் 5 வயது குழந்தையை குளிக்க வைப்பது போல மெஸ்ஸியுடன் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுத்த அந்த குழந்தை தற்போது கால்பந்து உலகின் நட்சத்திரங்களில் ஒருவரான உருவாகி மெஸ்ஸிக்கு எதிராகவே இந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் களம்காண உள்ளது. உலகத்தையே தன்னுடைய திறனால் கவர்ந்துள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் லமின் யமால்தான் அந்த குழந்தை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

transformation of lamin yamal
பிரான்ஸை விட நாங்கதான் சிறந்த அணி: 3-வது முறையாக நிரூபித்த ஸ்பெயின்.. 2010 மாயம் மீண்டும் நடக்குமா ?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com