
கடந்த வாரம் நடைபெற்ற WWE-யின் சம்மர் ஸ்லாம் போட்டியில் ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு ரிங்கில் இறங்கினார் ரோமன் ரெயின்ஸ்.
நேற்று நடைபெற்ற WWE பேபேக் ஈவெண்ட்டில் ‘டிரிபிள் த்ரெட்’ மேட்சில் பிரேவியாட் மற்றும் பிரான் ஸ்ட்ரோமன் என இருவரையும் நய்யப்புடைந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ரோமன் ரெயின்ஸ்.
ரிங்கில் லேட்டாக எண்ட்ரியாகி இருந்தாலும் புதிய ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட்டு WWE பேபேக் ஈவெண்ட்டில் கலந்து கொண்டார் ரோமன் ரெயின்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேவியாட் மற்றும் பிரான் ஸ்ட்ரோமனை காட்டுத்தனமாக அடித்து போட்டியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததும் அவரது ட்ரேட்மார்க் ‘ஸ்பியர்’ ஆயுதத்தால் ஸ்ட்ரோமனை முட்டி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
குழு போட்டியில் டொமினிக் மற்றும் ரீமிஸ்டிரியோ வென்றிருந்தனர்.