சீனியர் ரே மிஸ்டீரியோ
சீனியர் ரே மிஸ்டீரியோமுகநூல்

புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ‘சீனியர் ரே மிஸ்டீரியோ’ காலமானார்!

உலக புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர் தனது 66 வது வயதில் மெக்சிகோவில் காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
Published on

உலக புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ தனது 66 வது வயதில் மெக்சிகோவில் காலமானார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டு மல்யுத்த வீரராக தனது பயணத்தை தொடங்கிய இவரின் இயற்பெயர், மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ். உலக ரே மல்யுத்த சங்கம் மற்றும் லுச்சா லிப்ரே AAA போன்ற முக்கிய உலகளாவிய அமைப்புகளின் சாம்பியன்ஷிப் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். 1990 இல் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் ஸ்டார்கேட் உட்பட பல சர்வதேசப்போடிகளில் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.

முகமூடியை அணிந்து கொண்டு இவர்போடும் சண்டைக்கு ரசிகர் பட்டாளம் பல உள்ளது. 2009 இல் விளையாட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தாலும், 2023 இல் மீண்டும் ஒரு முறை மல்யுத்தத்தில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல இளைஞர்கள் இவரை தனது ரோல் மாடலாகவும் வைத்துள்ளனர்.

இவரை, WWE போட்டிகளில் ’uncle' என்று அழைக்கப்படுவார். 90-ஸ் கிட்ஸிற்கு பிடித்த ரே மிஸ்டீரியோவின் நேரடி உறவினர்தான் சீனியர் ரே மிஸ்டீரியோ. இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக மாஸ்க் அணிந்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகன் மல்யுத்தத்தை இன்று உலகரிய செய்ததில் சீனியர் ரே மிஸ்டீரியோ-க்கு பெரும் பங்கு உள்ளது. இப்படி தனது மல்யுத்தப்பாதையில் தனக்கென தனிக்கோட்டையை உருவாக்கிய இவருக்கு இப்போது 66 வயது. இந்தநிலையில்தான், இவர் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இறப்புக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

சீனியர் ரே மிஸ்டீரியோ
எவ்வளவு நேரம் என்பது மட்டுமல்ல... எந்த நிலையில் உறங்குகின்றீர்கள் என்பதும் முக்கியம்!

மிகுந்த ஆக்ரோஷமாக சண்டையிட்டு எதிராளிகளை நிலைகுலைய செய்யும் சீனியர் ரே மிஸ்டீரியோவின் மறைவிற்கு, உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com