சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை

சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை
சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை

சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் தொடரின் நம்பர் 1 வீராங்கனை அலிசன் அமிர்தராஜ் அதிர்ச்சியடையும் விதமாக தோல்வியடைந்துள்ளார். இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனை அங்கித்தா ரெய்னா முதல் சுற்றிலேயே படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் ஓரிரு தினங்களுக்கு முன் துவங்கின. இதில், நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் சென்னை ஓபன் தொடரில் நம்பர் 1 வீராங்கனையாகவும் சர்வதேச ரேங்கிங் பட்டியலில் 23வது இடத்திலும் உள்ளார் தரவரிசையில் 147-வது இடத்தில் உள்ளவருமான ரஷ்ய வீராங்கனை கஷாநோவா களமிறங்கினார். ரஷ்யாவிற்கு சர்வதேச தடையிருப்பதால் கொடி இல்லாமல் கஷாநோவா களமிறங்கினார்.

ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய கஷாநோவா 6-2, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். போட்டி தரவரிசையில் முதன் நிலையில் உள்ள அமெரிக்க வீராங்கனை அலிசன் அமிர்தராஜ் அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

சர்வதேச தரவரிசையில் 333வது இடத்திலும், இந்திய தரவரிசையில் முதலிடத்திலும் உள்ள இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, தரவரிசையில் 85வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீராங்கனை மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். நடப்பாண்டு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதி போட்டி வரை முன்னேறியிருந்த ஜெர்மனியின் மரியா, ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றினார்.

முதல் செட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனையை ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல் தனக்கே உரித்தான பாணியில் புள்ளிகளை குவித்த மரியா 6-0 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து இரண்டாவது செட் ஆட்டத்திலும் மரியாவின் கையே ஓங்கியிருந்தது. அந்த செட்டையும் 6-1 என்ற கணக்கில் வசப்படுத்தி 2-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனை அங்கிதா ஒட்டுமொத்தத்தில் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com