இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னான சாஹா 20 பந்துகளிலே சதம் அடித்து அசத்தி உள்ளார்
கொல்கத்தாவில் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக உள்ளுர் டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மோஹுன் பாகன் மற்றும் பி.என்.ஆர் கிளப்புகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய பி.என்.ஆர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தாஸ் 43 ரன்கள் சேர்த்தார். பின்னர் மொஹுன் பாகன் அணியின் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கிய இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் சாஹா, பி.என்.ஆர் அணியின் பந்துகளை அடித்து நாலபுறமும் பறக்கவிட்டார். இறுதியில் 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட்ட அவர் 20 பந்துகளிலே சதம் அடித்து அசத்தினார். அதிலும் 12 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த அவர் அடுத்த 8 பந்துகளிலே 50 ரன்களை சேர்த்தார். அதில் 14 சிக்சர்களும் 4 பவுண்டர்களும் அடங்கும்.