\
மைதானத்தில் மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி

மைதானத்தில் மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி

மைதானத்தில் மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி
Published on

விளையாட்டு மைதான கட்டடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தேசிய மல்யுத்த வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள மைதானத்தில் தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா (25) பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பின்னர், அந்த மைதானத்தின் அருகில் மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட மக்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

மைதானத்தில் உள்ள கட்டடங்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலாநாத் சிங் தெரிவித்தார். மேலும், வீரரின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அளிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com