மல்யுத்த வீரர் பஜ்ரங் திருமண நிச்சயதார்த்தம்: வீராங்கனையை மணக்கிறார்

மல்யுத்த வீரர் பஜ்ரங் திருமண நிச்சயதார்த்தம்: வீராங்கனையை மணக்கிறார்
மல்யுத்த வீரர் பஜ்ரங் திருமண நிச்சயதார்த்தம்: வீராங்கனையை மணக்கிறார்

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். 

இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. ஹரியானாவை சேர்ந்த இவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இவர் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். 

சங்கீதா, பிரபல மல்யுத்த முன்னாள் வீரர் மகாவீர் போகத்தின் மகள். மகாவீரின் வாழ்க்கையை மையப்படுத்திதான் அமீர்கான் நடித்த ’தங்கல்’ படம் உருவாக்கப்பட்டது. சங்கீதாவின் அக்கா கீதாவும் மல்யுத்த வீராங்கனை ஆவார்.
 
பஜ்ரங்- சங்கீதா காதல் விவகாரம் இரு வீட்டுக்கும் தெரியவந்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள பஜ்ரங் புனியாவின் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

இதுபற்றி சங்கீதாவின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் கூறும்போது, ‘எனது மகள்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்திருப்பதை நான் தடுக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி வாழ சம்மதித்தேன். இப்போது நான் மகிழ்ச்சியான மனிதனாக இருக்கிறேன்’’ என்றார். 

அடுத்த வருடம் ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடக்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு இவர்கள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com