"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்

"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்

"அடிப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை" சிஎஸ்கே தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் டவீட்
Published on

ஐபிஎல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய மும்பை இண்டியன்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும் குணால் பாண்ட்யா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கேதர் ஜாதவ் 58 ரன் எடுத்தார்.

தோல்விக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, "எங்களின் தொடக்கம் சரியாக இருந்தது. நாங்கள் பந்துவீசும் போது, முதல் 10-12 ஓவர் வரை சரியாகவே சென்றது. அடுத்து சில கேட்ச்-களை கோட்டை விட்டோம். ஃபீல்டிங்கில் சொதப்பினோம். பிறகு கடைசி கட்ட ஓவர் களில் சரியாகp பந்துவீசாமல் ரன்களை அள்ளிக் கொடுத்தோம். இதனால் தோல்வி அடைய நேர்ந்தது. எங்கள் திட்டங்களைச் சரியாக செயல்படுத்த முடியவில்லை. எந்த பேட்ஸ்மேனை டார்க்கெட் பண்ண வேண்டும், பவுண்டரிகள் செல்வதை எப்படி குறைக்க வேண்டும், ரன்கள் அதிகம் கொடுப்பதை எப்படி குறைக்க வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் தெரிந்திருக்க வேண்டும்" என்றார் தோனி.

இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் "அடிப்பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள், தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் "தோல்வியின்றி வரலாறா" என ட்வீட் செய்துள்ளார். இதில் " அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்" என்ற வசனம். நயன்தாரா, அதர்வா நடித்த "இமைக்கா நொடிகள்" படத்தில் வில்லன் பேசுனது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com