"மேட்ச் வின்னர்களை" தோனி உருவாக்கவில்லையா ? கோலி கதையைக் கூறிய ஆகாஷ் சோப்ரா !

"மேட்ச் வின்னர்களை" தோனி உருவாக்கவில்லையா ? கோலி கதையைக் கூறிய ஆகாஷ் சோப்ரா !
"மேட்ச் வின்னர்களை" தோனி உருவாக்கவில்லையா ? கோலி கதையைக் கூறிய ஆகாஷ் சோப்ரா !

சவுரவ் கங்குலியைப் போல தோனி தலைமையிலான இந்திய அணி சிறந்த வீரர்களை உருவாக்கவில்லை என்று கவுதம் காம்பீர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நிறைய மாட்ச் வின்னர்கள் இருந்தார்கள். தோனியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கும்போது அந்த வீரர்களால்தான் தோனி நிறைய வெற்றிகளைப் பெற்றார். ஆனால் தோனி தலைமையிலான இந்திய அணியில் மேட்ச் வின்னர்கள் பெரிதாக உருவாகவில்லை என பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா "தோனி ஒரு அற்புதமான கேப்டன். அணி ஒரு தலைமையிலிருந்து மற்றொரு தலைமைக்கு மாறும்போது, அதனை கையாள்வது சிரமமான காரணம். ஆனால் தோனி அந்தப் பணியை மிகச் சிறப்பாகவே செய்தார். அவர் அணிக்கு தலைமை ஏற்கும்போது சீனியர்கள் வீரர்கள் இருந்தார்கள். அதேவேளையில் ஜூனியர் வீரர்களும் இருந்தார்கள். சீனியர்களை சீண்டாத வகையில் இளம் வீரர்களை மேம்படுத்தினார் தோனி" என்றார்.

மேலும் தொடர்ந்த ஆகாஷ் சோப்ரா "தோனியின் தலைமையின் கீழ்தான் கோலி அறிமுகமானார். 2014 டெஸ்ட் போட்டிக்கு பின்பு கோலி அணியிலிருந்து நீக்கப்பட வேண்டிய சூழல். ஆனால் தோனி அவரை காப்பாற்றினார். ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுக்கும் நேரத்தில்தான் பும்ரா அணிக்குள் நுழைந்தார். தோனியின் தலைமையில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். அதன் பட்டியல் மிகவும் பெரியது. மேலும் கங்குலி - தோனி கேப்டன்சியை ஒப்பிடுவதுவும் மிகவும் தவறான விஷயம், அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இருவரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணி மோசமான நிலையிலிருந்து மீட்டவர்கள்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com