'விராட் கோலியால் மட்டுமே அந்த கிளாசிக் சிக்சரை அடிக்க முடியும்' - ஹரிஸ் ராஃப் பாராட்டு

'விராட் கோலியால் மட்டுமே அந்த கிளாசிக் சிக்சரை அடிக்க முடியும்' - ஹரிஸ் ராஃப் பாராட்டு
'விராட் கோலியால் மட்டுமே அந்த கிளாசிக் சிக்சரை அடிக்க முடியும்' - ஹரிஸ் ராஃப் பாராட்டு

விராட் கோலியை தவிர வேறு எந்த வீரராலும் தனது பந்துவீச்சில் கிளாசிக்கான சிக்சரை அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பாராட்டியுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. அன்றைய நாளில் 8 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில், விராட் கோலி நேராக அடித்த அந்த சிக்ஸர் வெகுவாக பாராட்டப்பட்டது. அதிலும் பாகிஸ்தான் அணியில் மிக அதிக வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ராஃப் பந்தில் விராட் கோலி சிக்சர் அடித்து மிரட்டினார்.

இந்நிலையில் அந்த சிக்சரை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று கூறியுள்ளார் ஹாரிஸ் ராஃப்.  இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர், ''விராட் கோலி எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது. ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது'' என்று கூரினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com