"டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கிறது" - டேவிட் வார்னர்

"டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கிறது" - டேவிட் வார்னர்
"டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக இருக்கிறது" - டேவிட் வார்னர்

வருங்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் எதை நோக்கிச் செல்லும் என தமக்குப் பயமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர தொடக்க பேட்டரான டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. மேலும், இதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யார் பங்கேற்க போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தொடர் ஆகும். இந்தப் பட்டியலில் இந்திய அணிக்கு முதல் இடத்துக்கு முன்னேற வேண்டுமானால், குறைந்தபட்சம் 3 போட்டிகளையாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனையடுத்தே இப்போட்டி இப்போதே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், வருங்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் நிலை என்னவாகும் என்ற பயம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், ”அடுத்த 5 அல்லது 10 வருடங்களில் என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. கிரிக்கெட் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதை நினைத்தால் எனக்குக் கொஞ்சம் பயம் ஏற்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உற்சாகமாக இருக்கும் வீரர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

அந்தப் பெருமிதம்தான் உங்கள் வாழ்க்கையின் முக்கியமானதாக இருக்கும். உங்கள் கிரிக்கெட் திறமையை நன்குப் பரிசோதிக்கக்கூடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது அற்புதமான விஷயம். உலகெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில்தான் பலருக்கும் ஆர்வம் உள்ளது. ஆனால் உங்கள் பணத்தின் மதிப்பை அறிய வேண்டுமென்றால் உங்களுக்கென்று நற்பெயரை எடுக்கவேண்டும். அதுதான் நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com