உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்..!

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்..!

உலகக்கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி 3-வது இடம் பிடித்தது பெல்ஜியம்..!
Published on

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி, பெல்ஜியம் அணி மூன்றாவது இடம் பிடித்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் , 64 ஆயிரம் ரசிகர்களுக்கு முன் 3-ஆவது இடத்திற்கான ஆட்டம் களைகட்டியது. போட்டி தொடங்கிய 4/ஆவது நிமிடத்திலேயே தாமஸ் மேனியர் கோல் அடித்து பெல்ஜியம் அணியை முன்னிலை பெறச் செய்தார். பதில் கோல் அடிக்க இங்கிலாந்து அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பெல்ஜியம் அணி வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். எனவே முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது பாதி விறு விறுப்பாக நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்கள் கோல் போட பல முறை முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டம் முடிய 8 நிமிடங்கள் இருந்தபோது, பெல்ஜியத்திற்கான இரண்டாவது கோலை அந்த அணியின் கேப்டன் ஈடன் ஹசார்ட் பதிவு செய்தார். ஆனால் இறுதிவரை எவ்வளவோ முயற்சித்தும் இங்கிலாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. எனவே முடிவில் இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com