உலக இளையோர் செஸ் சாம்பியின்ஷிப்: பதக்கம் வென்ற தமிழர்

உலக இளையோர் செஸ் சாம்பியின்ஷிப்: பதக்கம் வென்ற தமிழர்

உலக இளையோர் செஸ் சாம்பியின்ஷிப்: பதக்கம் வென்ற தமிழர்
Published on

இத்தாலியில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இத்தாலியில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல நாடுகளை சேர்ந்த இளம் செஸ் வீரர்கள் பங்கேற்றனர். 20 வயதுக்குபட்டோருக்கான இந்தப் போட்டியில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.

இதையடுத்து இறுதிச்சுற்றில் சீன வீரர் சு சியாங்குவை தோற்கடித்ததை அடுத்து, எட்டரை புள்ளிகள் எடுத்து அரவிந்த் மூன்றாவது இடம் பிடித்தார். அவரைத் தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்ற வீரர்களான பிராக்னனந்தா நான்காவது இடமும், கார்த்திகேயன் முரளி ஏழாவது இடமும் பிடித்தனர். பின்னர் மூன்றாம் இடம் பிடித்த அரவிந்த் சிதம்பரத்திற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com