உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி : நியூசிலாந்துடன் இந்தியா விளையாடுமா?
டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 2019-21 வரை அறிவித்தது ஐசிசி. இறுதி போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடும் எதிரணி எது என்பதுதான் இதுவரை உறுதியாகவில்லை. அந்த இடத்தை பிடிக்க இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டி போட்டு வருகிறது. ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட அந்த வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டது. இப்போது இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேதான் போட்டி. அது இந்தியா - இங்கிலாந்து மோதவுள்ள தொடரில் தெரிந்துவிடும்.

All to play for in the upcoming India v England series with three teams able to meet New Zealand in the final of the inaugural ICC World Test Championship!

Here's the breakdown, assuming a full 4-Test series with no ties and no further matches involving NZ or Australia ? #WTC21 pic.twitter.com/TTZFkPd1Ex
— ICC (@ICC) February 2, 2021

இந்தியா இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதா?
இந்தியா இப்போதைக்கு 71.70 சதவிகிதத்துடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னால் உள்ளன. இருப்பினும் 70 சதவிகிதம் பெற்ற நியூசிலாந்து அணி விளையாட தேர்வாகியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்று விடும்.
இந்தத் தொடரில் இந்தியா குறைந்தது இரண்டு வெற்றிகளையாவது பெற்றாக வேண்டும். அது 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என தொடரை கைப்பற்ற வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட இந்தத் தொடரில் 3 போட்டிகளில் வென்றாக வேண்டும்.