உலக சூப்பர் பைக் பந்தயம் - பிரிட்டன் வீரர் வெற்றி

உலக சூப்பர் பைக் பந்தயம் - பிரிட்டன் வீரர் வெற்றி

உலக சூப்பர் பைக் பந்தயம் - பிரிட்டன் வீரர் வெற்றி
Published on

உலக சூப்பர் பைக் பந்தயத் தொடரில், பிரிட்டன் வீரர் ஜோனதன் ரியா வெற்றி பெற்றார். 

உலக சூப்பர் பைக் பந்தயத் தொடர் 13 நாடுகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் இரண்டு சுற்றுகளை கொண்டதாக இந்தப்போட்டி நடத்தப்படுகிறது. 9 நாடுகளில் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 370 புள்ளிகளுடன் பிரிட்டன் வீரர் ஜோனதன் ரியா முதலிடத்தில் உள்ளார். சக நாட்டு வீரரான சாஸ் டேவிஸ் 278 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் நெதர்லாந்து வீரர் வேன் டேர் மார்க்கின் சவாலை முறியடித்து ரியா முதலிடம் பிடித்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com