பிஎஸ்எல் டி20 தொடர்: ஒரே போட்டியில் ஒட்டுமொத்தமாக 515 ரன்கள் குவித்து உலக சாதனை

பிஎஸ்எல் டி20 தொடர்: ஒரே போட்டியில் ஒட்டுமொத்தமாக 515 ரன்கள் குவித்து உலக சாதனை
பிஎஸ்எல் டி20 தொடர்: ஒரே போட்டியில் ஒட்டுமொத்தமாக 515 ரன்கள் குவித்து உலக சாதனை

டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் மொத்தமாக 515 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்)  டி20 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடந்த முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 515 ரன்கள் குவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் உஸ்மான் 43 பந்துகளில் 12 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உட்பட 120 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அவர் பிஎஸ்எல் வரலாற்றில் 36 பந்துகளில் சதமடித்து மற்றுமொரு மைல்கல் சாதனை படைத்தார். இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 253 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் மொத்தமாக 515 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபரில் தென்னாப்பிரிக்காவில் நடந்த சிஎஸ்ஏ டி20 சேலஞ்ச் போட்டியில் டைட்டன்ஸ்-நைட்ஸ் அணிகளுக்கிடையே 501 ரன்கள் குவிக்கப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது பிஎஸ்எல் தொடரில் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com