டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச்சுக்கு கொரோனா பாதிப்பு..!
உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அடித்தட்டு மக்கள் முதல் உச்சத்தில் உள்ள பிரபலங்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்சுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜோக்கோவிச் பெல்கிரேடில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உலக தரவரிசையில் 33வது இடத்தில் உள்ள போர்னா கொரிக்-க்கு கடந்த திங்கட் கிழமை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதே தினத்தில் ட்ராய்க்கி என்ற டென்னிஸ் வீரருக்கும், கடந்த ஞாயிற்றுக்கிழமை திமிட்ரோவ் என்ற டென்னிஸ் வீரருக்கும் கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. இவர்களும் ஜோக்கோவிச்சுடன் தொடரின் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.