விளையாட்டு
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா - வெனிசுலா போட்டி டிரா
உலகக்கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா - வெனிசுலா போட்டி டிரா
உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா - வெனிசுலா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வெனிசுலா அணி முன்னிலை பெற்றது. அடுத்த 3 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி, பதில் கோல் அடித்து சமன் செய்தது. தகுதிச் சுற்றில் தென் அமெரிக்க அணிகளுக்கான பிரிவில் 24 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் பெரு மற்றும் ஈக்வடார் அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்தப் பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற உள்ளன. முதலிடத்தில் உள்ள பிரேசில் ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிக்கான தகுதியை உறுதி செய்துவிட்டது.