\
உலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்

உலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்

உலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்
Published on: 

உலகக் கோப்பை செஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

5 முறை உலகச் சாம்பியனான ஆனந்த், இரண்டாவது சுற்றில் கனடாவின் அன்டான் கோவல்யோவை எதிர்கொண்டார். முதல் போட்டியில் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அடுத்த சுற்றுக்கு முன்னேற‌, ‌இரண்டாவது போட்டியில் கனடா வீரரை தோற்கடிக்க வேண்டிய நெருக்கடி ஆனந்திற்கு உள்ளது. இந்தியாவின் சந்தோஷ் குஜ்ராத்தி, இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்றார். ஹரிகிருஷ்ணா, சேதுராமன், அதிபன் ஆகியோர், முதல் போட்டியை டிரா செய்தனர். முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள உலகக்கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

5 முறை உலகச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் 2018 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் கேண்டிடேஸ் செஸ் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com