விளையாட்டு
உலகக் கோப்பை செஸ்: 2வது சுற்றுக்கு ஆனந்த் முன்னேற்றம்
உலகக் கோப்பை செஸ்: 2வது சுற்றுக்கு ஆனந்த் முன்னேற்றம்
உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
முதல் சுற்றுப் போட்டியில் மலேசியாவின் லி டியனை எதிர்த்து ஆனந்த் விளையாடினார். இந்தப்போட்டியின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகித்த ஆனந்த், இரண்டாவது போட்டியை சமன் செய்தார். இதையடுத்து ஒன்றரை புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றார். ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், விளாடிமிர் கிராம்னிக் உள்ளிட்ட முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
5 முறை உலக சாம்பியனான ஆனந்த், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்பதன் மூலம், 2018-ஆம் ஆண்டு கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்யும் முனைப்பில் இருக்கிறார்.