மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்க தேசத்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்க தேசத்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்க தேசத்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், தென் ஆப்ரிக்க அணி, வங்க தேச அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூசிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டூனிடின் நகரில் நடைபெற்ற போட்டியில், டாஸில் வென்ற வங்கதேச அணி, தென் ஆப்ரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. வங்க தேசத்தின் இளம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் ரன் குவிக்கத் திணறினர். 45.2 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 207 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

208 ரன்கள் என்ற இலக்குடன் களம் கண்ட வங்க தேச அணி, சீரான வேகத்தில் ரன் குவிக்கத் தொடங்கியது. ஆனாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகள் சரிய, வங்க தேச அணி 49.3 ஓவர்களில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்ரிக்காவின் அயபோங்கா காக்கா சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு துணை நின்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com