உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதுவுள்ளன என்பது முடிவாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. அரையிறுதி போட்டியில், புள்ளிப் பட்டி யலில் முதலிடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தில் உள்ள அணியுடனும், 2-வது இடத்தில் உள்ள அணி, 3-வது இடத்தில் இருக்கும் அணியுடனும் மோத வேண்டும்.
இந்திய அணி, 13 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் இலங்கையை வீழ்த்தியதால் 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இதே போல 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தனது கடைசி லீக்கில் தென்னாப்பிரிக்காவுடன் நேற்று மோதியது. இதில் தோல்வியடைந்ததால், புள்ளிப்பட்டியலில் இரண் டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இதனால் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியி ல் மோதுகிறது. மான்செஸ்டரில் வரும் செவ்வாய்க்கிழமை (9 ஆம் தேதி) இந்தப் போட்டி நடக்கிறது.
இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியும், மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி, வியாழக்கிழமை (11 ஆம் தேதி) பர்மிங்காமில் நடைபெறுகிறது.