உலகக் கோப்பை இந்திய அணி : யார் யாருக்கு வாய்ப்பு ?

உலகக் கோப்பை இந்திய அணி : யார் யாருக்கு வாய்ப்பு ?

உலகக் கோப்பை இந்திய அணி : யார் யாருக்கு வாய்ப்பு ?
Published on

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை வரும் மே 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்தப் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. வேல்ஸ் நாடும் பிரிட்டனை சார்ந்த நாடுதான் என்பதும், இங்கிலாந்திற்கு அருகாமையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இங்கிலாந்து அணி இங்கு பலம் கொண்டு இருக்கும். அதேபோன்று இங்கிலாந்து மைதானங்களில் ஆஸ்திரேலிய அணியும் கடும் சவாலாக இருக்கும். 

இந்த இரண்டு அணிகளையும் எதிர்கொள்ளும் வகையிலும், இங்கிலாந்து மைதானங்களில் சிறப்பாக விளையாடும் வகையிலும் உலகின் மற்ற அனைத்து அணிகளும் தங்கள் அணியின் வீரர்களை தேர்வு செய்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியிலும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

இந்த அறிவிப்பில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை காணலாம். இந்திய அணியை பொறுத்தவரை முதற்கட்ட வீரர்கள், இரண்டாம் கட்ட வீரர்கள் மற்றும் மாற்று ஆட்டக்காரர்கள் என மூன்று வகையாக பிரிக்கலாம். இதில் உலகக் கோப்பை அணியின் முதற்கட்ட வீரர்கள் பட்டியலில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், தோனி, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் கட்டாயம் அணியில் இடம்பிடிப்பார்கள்.

இவர்களுக்கு அடுத்த படியாக இரண்டாம் கட்ட வீரர்களாக அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்தி, கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் உள்ளனர். இதில் ராயுடு மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தோனிக்கு மாற்று கீப்பர் தேவை என்பதால் தினேஷ் கார்த்திக் இடம் பிடிப்பார் எனப்படுகிறது. அதேபோன்று ஆல்ரவுண்டரில் சங்கரும் சிறப்பாக விளையாடியுள்ளார்.

இதற்கு அடுத்த படியாக கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த் ஆகியோரில் ஒருவரை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியில் 4ஆம் இடத்தில் களமிறங்குவதற்கு சரியான பேட்ஸ்மேன் இன்னும் பொருந்தவில்லை. அதேசமயம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே அனுபத்தின் அடிப்படையில் இவர்களில் ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com