கால்பந்தாட்டக் கண்கள் இன்று ரோனால்டோ மீது ! சாதிப்பாரா ?
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது. இதனையடுத்து சொந்த நாட்டின் அணி வெற்றிப் பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கெண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து இன்று உலகமே உற்று நோக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் போட்டி நடைபெறுகிறது. ஆம், இன்று இரவு 11.30 மணிக்கு ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகள் அணிக்கும் செரிகோ ரமோஸ் தலைமையிலான பலம்வாய்ந்து ஸ்பெயின் அணிக்கும் பலப்பரிட்சை நடைபெறுகிறது. போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியே வெல்வதற்கான கடைசி வாய்ப்பாகும். அவரது பதக்கப் பட்டியலில் உலகின் முக்கிய கோப்பைகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தாலும் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் இடம் பெறவில்லை. இதனையடுத்து ரொனால்டோ மீது இம்முறை அதிக கவனம் விழுந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ரஷ்யாவின் மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.
இன்றையப் போட்டிகள்:
எகிப்து-உருகுவே, மாலை 5.30.
மொராக்கோ-ஈரான், இரவு 8.30.
போர்ச்சுகல்-ஸ்பெயின், இரவு 11.30.