நெய்மர் ஒரு பித்தலாட்டக்காரர் ! கடுப்பில் மெக்சிகோ கோச்

நெய்மர் ஒரு பித்தலாட்டக்காரர் ! கடுப்பில் மெக்சிகோ கோச்

நெய்மர் ஒரு பித்தலாட்டக்காரர் ! கடுப்பில் மெக்சிகோ கோச்
Published on

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இப்போது நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டியில் மெக்சிகோ, பிரேசில் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக போட்டி நடைபெற்றது.

இதில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு நுழைந்தது. இந்தப் போட்டியில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆனால் இந்தத் தோல்வி குறித்து மெக்சிகோவின் கோச் ஒசாரியோ கூறியது "இந்தப் போட்டியில் பந்து அதிகளவில் மெக்சிகோ அணியிடமே இருந்தது. ஆனால் பிரேசில் அணியின் ஒரு வீரரால், அதாவது நெய்மரால் ஆட்ட நேரம் வீணானது. இது கால்பந்தாட்டத்துக்கு பெரும் வெட்கக்கேடானது" என்று கூறியுள்ளார்.

ஆட்டத்தின் 72 நிமிடத்தில் மெக்சிகோ வீரர் மிகுலுடன் மோதி நெய்மர் கீழே விழுந்தார். காலை பிடித்துக்கொண்டு துடித்தார். கள நடுவர்களும், மருத்துவர்களும் நெய்மருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், இதற்காக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மெக்சிகோ அணியினர் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து தொடர்ந்து பேசிய ஒசாரியோ "ஆட்ட நேரத்தை வீணாக்குவது பிரேசில் அணியின் மிக மட்டமான தந்திரம். அதில் நெய்மர் ஒரு சிறந்த நடிகர். உலகக் கோப்பை போட்டியில் அதிகளவில் பவுஃல், நெய்மர் செய்துள்ளார்" என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com