விளையாட்டு
அரையிறுதியில் பிரான்ஸ் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !
அரையிறுதியில் பிரான்ஸ் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதி போட்டியில் உருகுவே, பிரான்ஸ் அணிகள் பலட்பரீச்சை நடத்தின. தோற்கும் அணி வெளியேற்றப்படும் என்பதால் இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 40வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் வரானே முதல்கோல் அடித்தார்.
அடுத்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 61வது நிமிடத்தில் கிரிஸ்மான் இரண்டாவது கோல் அடித்து பிரான்ஸ் அணியை முன்னிலை பெறச்செய்தார். தொடர்ந்து உருகுவே அணி வீரர்கள் முயற்சிசெய்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று, முதல் அணியாக அரையுறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.