ஸ்வீடன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா இங்கிலாந்து ?
விறுவிறுப்பு நிறைந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில், காலிறுதி ஆட்டங்கள் இன்று நிறைவடைகின்றன.
ரஷ்யாவின் சமரா நகரில் இன்று நடைபெறும் காலிறுதியாட்டம் ஒன்றில் தரநிலையில் 12வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 24ஆவது இடத்தில் உள்ள ஸ்வீடன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 24 போட்டிகளில் இங்கிலாந்து அணி 8ல் வெற்றி பெற்றுள்ளது. ஸ்வீடன் அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. 9 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
சோச்சி நகரில் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் கடைசி காலிறுதியாட்டத்தில் தரநிலையில் 70ஆவது இடத்தில் உள்ள ரஷ்ய அணி, தரநிலையில் 20ஆவது இடத்தில் இருக்கும் குரேஷியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குரேஷிய அணி ஒரு போட்டியில் வென்றுள்ளது. இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
காலிறுதியாட்டம்
ஸ்வீடன் vs இங்கிலாந்து
இடம்: சமரா
நேரம்: இரவு 7.30
ரஷ்யா vs குரேஷியா
இடம்: சோச்சி
நேரம்: இரவு 11.30