\
சொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா

சொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா

சொந்த நாட்டில் மண்ணை கவ்வியது ரஷ்யா - அரையிறுதியில் குரேஷியா
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்யாவை வீழ்த்தி குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது. பெனால்டி சூட் அவுட் முறையில் நான்கிற்கு மூன்று என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை குரேஷியா வீழ்த்தியது

நேற்று இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகள் முழு பலத்துடன் ஆக்ரோசமாக விளையாடினர். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சோச்சி மைதானத்தில் விளையாடிய ரஷ்யா 31 ஆவது நிமிடத்தில் தனது கோலை பதிவு செய்தது. பதிலுக்கு ஆக்ரோசத்துடன் விளையாடிய குரேஷியாவின் ஆண்ட்ரேஜ் கிராமாரிக் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 

பரபரப்பு தொற்றிக் கொண்ட நிலையில் இரண்டாம் பாதியில் 101 ஆவது நிமிடத்தில் குரேஷியா அணி இரண்டாவது கோல் அடித்தது. பதிலுக்கு ரஷ்யாவும் 115 ஆவது நிமிடத்தில் கோல் அடித்து 2 - 2 என்ற கணக்கில் சமன் செய்தது. போட்டி சமனில் முடிந்ததால் பின்னர் நடைபெற்ற பெனால்டி சூட்-அவுட்டில் 4- 3 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி குரேஷியா வெற்றி பெற்றது.

 
முன்னதாக, உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்வீடன் அணியை இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்து அணி வெற்றியை வசப்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com