உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்
Published on

ஜெர்மனியில் நடைபெற்று வரும், உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி, 56 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில், துனிஷியாவின் பிலிக் மஹம்தியை தோற்கடித்தார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் குறைந்தபட்டம் வெண்கலப் பதக்கத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். ‌உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், விகாஷ் கிரிஷன், ஷிவதாபா ஆகியோருக்கு பிறகு, பதக்கம் வெல்லும் நான்காவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் கவுரவ் பிதூரி பெறுகிறார். அமித் பாங்கல், கவிந்தர் பிஸ்த் ஆகிய இந்திய வீரர்கள் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com