உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெள்ளிப் பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெள்ளிப் பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: வெள்ளிப் பதக்கம் வென்றார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
Published on

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோக் கீன் யூவ் உடன் ஸ்ரீகாந்த் பலப்பரீட்சை நடத்தினார். 43 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில், முதல் கேமை 21-15 என சிங்கப்பூர் வீரர் கைப்பற்றினார். இரண்டாவது கேமில், ஒருகட்டத்தில் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். எனினும் சிங்கப்பூர் வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 22-20 எனக் கைப்பற்றி தங்கப்பதக்கம் வென்றார்.

இறுதிப்போட்டி வரை முன்னேறிய கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில், ஆடவர் பிரிவில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை ஸ்ரீகாந்த் பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் லக்ஷயா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com