\
உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் முன்னேற்றம்

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் முன்னேற்றம்

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பி.வி.சிந்து, லக்ஷயா சென் முன்னேற்றம்
Published on: 

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி, ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. மகளிர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில், தொடரின் ஆறாம் நிலை வீராங்கனையான சிந்து, ஸ்லோவாக்கியாவின் மார்டினா ரெசிஸ்காவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-7, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றியை வசமாக்கினார்.

ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், ஜப்பானின் கென்டோ நிஷிமோடோ உடன் பலப்பரீட்சை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த போட்டியில், 22-20, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென் போராடி வெற்றி பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com