உலகச் சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் டோரி போவி

உலகச் சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் டோரி போவி

உலகச் சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் டோரி போவி
Published on

உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் இன்றைய போட்டியில் பல நாட்டு வீராங்கனைகள் பதக்கங்களை வென்றனர். உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின், மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை டோரி போவி, தங்கம் வென்றார்.

டோரி போவி பந்தய இலக்கை 10.85 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஐவரி கோஸ்ட் வீராங்கனை மரியா ஜோஸ் வெள்ளிப் பதக்கமும், நெதர்லாந்தின் ஷெப்பர்ஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மகளிர் போல்வால்ட் போட்டியில் கிரீஸ் வீராங்கனை, ஸ்டெஃபானிடி தங்கப் பதக்கம் வென்றார். அவர் 4.91 மீட்டர் தாண்டி முதலிடம்‌ பிடித்தார். இதேபோல் ஆடவருக்கான குண்டு எறிதலில், நியூசிலாந்து வீரர் தாமஸ் வால்ஸ் 22.03 மீட்டர் தூரம் வீசியெறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com