விளையாட்டு
உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: வெண்கலம் வென்றார் தீபிகா
உலகக்கோப்பை வில்வித்தை போட்டி: வெண்கலம் வென்றார் தீபிகா
தாய்லாந்தில் நடந்த உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
பேங்காக் நகரில் நடைபெற்ற ரீகர்வ் பிரிவில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானா தைஷ்ரெம்பிலோவா உடன் தீபிகா பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பத்தில் இருந்தே போட்டியில் முன்னேறிய தீபிகா 7-3 என்ற கணக்கில் சயானாவை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய சுற்றில் கொரிய வீராங்கனை கிம் சுரினிடம் தீபிகா தோல்வியை தழுவியதால் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் அவரால் பங்கு பெற முடியாமல் போனது. இந்நிலையில் வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி தீபிகா வெற்றியை வசப்படுத்தினார்.